Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

விலங்கு கணக்கெடுப்பிற்காக 39 இலட்சத்து 16,314 ரூபா செலவிடப்பட்டுள்ளது!

செப்டம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் விலங்கு கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பின் மூலம் இலங்கையில் 51,97,517 மந்திகள், 17,47,623 குரங்குகள், 26,66,630 மர அணில்கள், 42, 85,745 மயில்கள் இருப்பது தெரியவந்துள்ளது.39 இலட்சத்து 16,314 ரூபா இந்த கணக்கெடுப்பிற்காக செலவிடப்பட்டுள்ளது. விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இதனை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பி.ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில்,

‘‘இலங்கையில் விலங்குகள் கணக்கெடுப்பு 2025.03.15 ஆம் திகதியன்று யாழ். மாவட்டத்தில் நெடுந்தீவை தவிர்த்து ஏனைய சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கணக்கெடுப்புக்கு 39 இலட்சத்து 16ஆயிரத்து 314 ரூபா செலவிடப்பட்டது. இந்த விலங்கு கணக்கெடுப்புக்கு பல கோடி ரூபா செலவிடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.

விலங்கு கணக்கெடுப்பின் பெறுபேறு கடந்த ஏப்ரல் சகல பிரதேச செயலகப் பிரிவுகள் ஊடாக விவசாயத்துறை அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றது. இதற்கமைய இலங்கையில் 51 இலட்சத்து 97ஆயிரத்து 517 ஆயிரம் மந்திகள், 17 இலட்சத்து 47ஆயிரத்து 623 குரங்குகள், 26 இலட்சத்து 66ஆயிரத்து 630 மர அணில்கள், 42 இலட்சத்து 85ஆயிரத்து 745 மயில்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் கடந்த காலங்களில் விலங்கு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. இதனால் காட்டு விலங்குகளால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் விளைவை மதிப்பிடுவதிலும் விலங்குகளை கட்டுப்படுத்துவதிலும் சிக்கல் காணப்பட்டது. காட்டு விலங்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தான் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கணக்கெடுப்பின் தரவுகள் 50 சதவீதமளவில் உறுதியானதாக அமையாது என்பதை அறிவோம். இருப்பினும், மிகுதி 50 சதவீதமான தரவுகள் உறுதியானவை. முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளது. இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த தொழில்நுட்ப ரீதியில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

முந்தைய செய்தி சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!
அடுத்த செய்தி நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

இளைஞர் வளத்தை வலுவானதாக கட்டியெழுப்ப சிகரம் நிறுவனம் விசேட நடவடிக்கை…

மார்ச் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொது போக்குவரத்துகளுக்கு விசேட அறிவிப்பு

நவம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகரித்து வரும் எயிட்ஸ் நோயாளர்கள்!

டிசம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாடாளுமன்ற சபையில் மறுக்கப்பட்ட சாணக்கியனின் கோரிக்கை!

ஜூன் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?