வவுனியா புதுக்குளம் பகுதிக்கு அருகாமையில் முதிரைக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று விபதிற்குள்ளான நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டது.
இவ்விபத்து இன்று காலை இடம்பெற்றதுடன் குறித்த வாகனம் இரணை இலுப்பங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த போது அங்கு கடமையில் இருந்த பொலிசாரால் வழிமறிக்கப்பட்டுள்ளது. எனினும் அது நிறுத்தாமல் சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் புதுக்குளத்திற்கு அண்மித்த பகுதியில் விபத்திற்குள்ளான நிலையில் பொலிசாரால் அவ் வாகனம் மீட்கப்பட்டது.
வாகனத்தில் இருந்த 11 முதிரைக்குற்றிகளை பொலிசார் கைப்பற்றியிருந்தனர்.
வாகனத்தின் சாரதி மாயமாகியுள்ள நிலையில் ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
