Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

விடாமுயற்சியுடன் முயன்றால் மாற்றத்தை ஏற்படுத்தலாம் – ஆளுநர் நா.வேதநாயகன்

ஆகஸ்ட் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மாற்றத்தை ஏற்படுத்த முனையும்போது, ஏற்படுத்தும்போதும் அது கடினமானதாகத்தான் இருக்கும். ஆனால் எல்லோரும் ஒன்றிணைந்து விடாமுயற்சியுடன் முயன்றால் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் ‘இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு’ என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிகழ்வின் ஓர் அங்கமாக யாழ். மாவட்டப் பாடசாலை அதிபர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழிப்புணர்வுச் செயலமர்வை ஆரம்பித்து உரையாற்றிய ஆளுநர்,

அரசாங்கம் மூன்று விடயங்களில் பிரதானமாக கவனம் செலுத்தியுள்ளது. வறுமைத்தணிப்பு, எண்ணிமம்படுத்தல் (டிஜிட்டல் மயமாக்கல்) தூய்மை இலங்கை என்ற அந்த மூன்று விடயங்களில் தூய்மை இலங்கை என்ற செயற்றிட்டம் மிகப் பிரதானமானது.

எமது சுற்றாடலையும், எம்மையும் சுத்தமாக வைத்திருப்பது மாத்திரம் இதன்நோக்கம் அல்ல. எமது சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். தனி நபரிலிருந்து அது ஆரம்பித்து சமூகம் வரை மாற்றம் நீண்டு செல்ல வேண்டும். சட்டத்தை மதிக்கின்ற சமூகமாக, கண்ணியமான, ஒழுக்கமுள்ள சமூகமாக நாங்கள் மாறவேண்டும்.

மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும். எதிர்கால தலைமுறையை உருவாக்குகின்றவர்கள் நீங்கள். ஒவ்வொரு பாடசாலை அதிபரும் சிறப்பான தலைமைத்துவத்தை தங்கள் பாடசாலைகளுக்கு வழங்கினாலே போதும்.

தலைமைத்துவம் மிக முக்கியமானது. சிறந்த தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொள்கின்ற நிறுவனங்கள் மேலோங்கிச் செல்வதை நாங்கள் பல இடங்களில் நேரில் கண்டிருக்கின்றோம்.

எனவே, ஒவ்வொரு பாடசாலை அதிபரும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளுடன் உயர்வான தலைமைத்துவத்தை பாடசாலைகளுக்கு வழங்கவேண்டும். அதன் ஊடாக எதிர்காலச் சந்ததியினரான மாணவர்களிடத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என ஆளுநர் தெரிவித்தார்.

இந்தச் செயலமர்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் உதவிப் பணிப்பாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளர், யாழ். இந்துக் கல்லூரி அதிபர், யாழ். மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி உர மானியத்தை டிஜிட்டல் முறையில் வழங்க நடவடிக்கை!
அடுத்த செய்தி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த முதியோர்களுக்கான தேசிய செயலகத பணிப்பாளர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் பாடகர் மனோவின் ஊடக சந்திப்பு!

ஆகஸ்ட் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது

மே 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் உண்ணாவிரத போராட்டம்

செப்டம்பர் 25, 2025
1
இலங்கை

செங்கலடியில் மோட்டர் குண்டு ஒன்று மீட்பு.

மார்ச் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?