இலங்கை அரசு, விவசாயிகளுக்கு உர மானியத்தை சரியான நேரத்தில், முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, QR குறியீடு அல்லது பொருத்தமான மானியத்தை பயன்படுத்தி உர விநியோகத்தை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக, தகுதியுள்ள விவசாயிகளை விவசாய அமைச்சின் கீழ் பிரதேச செயலாளர்கள் மூலம் அடையாளம் காணவும், அவர்களுக்கு உர மானியத்தை வழங்கவும் டிஜிட்டல் பொறிமுறையை உருவாக்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் (ஜனாதிபதி), மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்கள் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த டிஜிட்டல் முறைமை, உர மானியத்தின் வினியோகத்தை முறைசார்ந்த, வெளிப்படையான மற்றும் திறமையான முறையில் மேற்கொள்ள உதவும்.
