Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஊடகவியலாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சாவகச்சேரி நகர பிதா

ஆகஸ்ட் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நகர சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் நகர பிதாவின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

நகர சபையின் மாதாந்த கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர பிதா வடிவேலு சிறிபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

அதன் போது சென்ற கூட்ட அறிக்கையில் பல விடயங்கள் விடுபட்டு உள்ளதாகவும் , யார் யார் என்ன கருத்து கூறினார்கள் என்ற விடயம் குறிப்பிடப்படவில்லை எனவும், உப நகர பிதா ஞா. கிசோர் சென்ற கூட்ட அறிக்கை வாசித்த போது தனது எதிர்ப்பினை வெளியிட்டார்.

அதன் போது உபநகர பிதாவின் உரையை இடைநிறுத்திய நகர பிதா , அங்கிருந்த ஊடகவியலாளரை , வெளியேற்றுமாறு , நகர சபை உத்தியோகஸ்தர்களுக்கு பணித்துள்ளார்.

அதனை அடுத்து கூட்டத்தில் இருந்த ஊடகவியலாளர் தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்திய போதிலும் , சபை அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதியில்லை என கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

உள்ளூராட்சி சபைகளின் மாதாந்த கூட்டங்களில் ஊடகங்கள் கலந்து கொள்வதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய சபைகள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் சாவகச்சேரி நகர சபையில் மாத்திரம் ஊடகங்களுக்கு அனுமதியில்லை என ஊடகவியலாளரை அங்கிருந்து நகர பிதா வெளியேற்றிய சம்பவம் சக ஊடகவியலாளர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாவகச்சேரி நகர சபை நகர பிதா தெரிவின் போது , ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சபையில் நடைபெறும் விடயங்கள் மக்கள் மத்தியில் சென்றடைவதை தடுக்கும் முகமாகவே ஊடகவியலாளரை சபையில் இருந்து வெளியேற்றியுள்ளதாகவும் , குறிப்பாக சென்ற கூட்ட அறிக்கையில் உள்ள குறைப்பாடுகளை உபநகர பிதா சுட்டிக்காட்டி உரையாற்றும் போது ஊடகவியலாளரை அங்கிருந்து அப்புறப்படுத்தியமை தவிசாளர் தனது தவறுகளை வெளியில் தெரியாமல் தடுக்கவே எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

முந்தைய செய்தி யாழில். வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு
அடுத்த செய்தி உர மானியத்தை டிஜிட்டல் முறையில் வழங்க நடவடிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கடல் வளத்தை பாதுகாக்க பொறிமுறைகளை உருவாக்குவோம் – இராமலிங்கம் சந்திரசேகர்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் தீ விபத்து!

ஜூலை 24, 2025
இலங்கை

மன்னார் காற்றாலை தொடர்பாக ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

நவம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாதசாரி கடவையில் மின் விளக்குகளை பொருத்தும் திட்டம் முன்னெடுப்பு!

மே 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?