நாட்டில் இதுவரையான காலப்பகுதியில்,நாட்டின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி,ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையால் 11,554.32 மில்லியன் அமெரிக்க டொலராக ஏற்றுமதி வருமானம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 6.61% வளர்ச்சியை காட்டியுள்ளது.
அத்துடன் 2025 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் வணிகம் மற்றும் சேவைத் துறைகளில் மொத்த ஏற்றுமதி வருவாய் 1,607.58 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவானது.
2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 2.57% வருடாந்த வளர்ச்சியாகும்.


