Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சை கூடம் இன்று முதல் செயற்பாட்டில்!

செப்டம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா பொது வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இருதய சத்திர சிகிச்சை நிலையம் இன்றைய தினம் தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.

நெதர்லாந்து அரசின் நிதி உதவியோடு இருதய சத்திர சிகிச்சை கூடம் அதற்கான உபகரணங்களோடு அமைக்கப்பட்டபோதிலும் பயன்பாடின்றி காணப்பட்டது.

இந் நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த இரு வருடங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்ட நிலையிலும் வைத்திய நிபுணர்கள் இன்மையால் குறித்த சத்திர சிகிச்சை கூடம் செயற்படாமல் இருந்தது.

இதன் காரணமாக வவுனியா மற்றும் அதனை ஆண்டிய பகுதி மக்கள் யாழ் ஆதார வைத்தியசாலை மற்றும் வேறு மாவட்டத்திற்கும் செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் சுகாதார அமைச்சினால் இருதய சத்திர சிகிச்சை நிபுணர் தி. வைகுந்தன் நியமிக்கப்பட்டதன் பின்னர் குறித்த சத்திர சிகிச்சை கூடத்தினை ஆரம்பிப்பதற்கான முழுமையான பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதன் பிரகாரம் ஆளணி பற்றாக்குறை காணப்பட்ட போதிலும் கூட யாழ் மாவட்டத்தின் சிரேஸ்ட முன்னணி இருதய சத்திர சிகிச்சை நிபுணர் பி. லக்ஸ்மன், வவுனியா இருதய சத்திர சிகிச்சை நிபுணர் எஸ். ஆர். குமார மற்றும் ஏனைய வைத்தியர்கள், வைத்தியசாலை நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் இன்றைய தினம் குறித்த இருதய சத்திர சிகிச்சை கூடத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் சுமார் எட்டு வைத்தியசாலைகளிலேயே இருதய சத்திர சிகிச்சை பிரிவுகள் உள்ள நிலையில் வவுனியாவிலும் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளமை பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது!
அடுத்த செய்தி தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் விமர்சிப்பது எங்களுக்கு கவலை இல்லை-திஸ்ஸ அத்தநாயக்க!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

2026 வரவுசெலவுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் வலுசக்தித் துறையின் தரப்பினர்களுடன் இன்று இடம்பெற்றது!

செப்டம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொக்கட்டிச்சோலை பகுதி வயலில் மிதி வெடி மீட்பு

அக்டோபர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சீரற்ற வானிலையால் தீவிரம் அடையும் டெங்கு பரவல்!

நவம்பர் 9, 2025
இலங்கை

வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு

பிப்ரவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?