Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இந்திய-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் நாளை!

செப்டம்பர் 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியா – அமெரிக்கா இடையே தடைபட்டிருந்த வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வார்த்தை நாளை நடைபெறவுள்ளது.

இந்தியா – அமெரிக்கா இடையே ஐந்து சுற்றுக்களாக இடம்பெற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், விவசாயம் மற்றும் பால்பண்ணைத் துறையில் இந்திய சந்தையை திறந்துவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால், இந்திய மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தடைபட்டது. அமெரிக்க பிரதிநிதிகளும் இந்தியா வரவில்லை.

இதனிடையே, சமீபத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த இந்திய பிரதமர் மோடியும், இந்த பேச்சுக்களை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே தடைபட்டு இருந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளதாக வர்த்தகத்துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையில், தூதரகம், வர்த்தக சிறப்பு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மட்டத்தில் என பல வகைகளில் நடைபெற்று வருவதாகவும், பல்வேறு விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய சார்பில், வர்த்தகத்துறை சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் பங்கேற்க உள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அரசு சார்பில் மத்திய மற்றும் தெற்கு ஆசியாவுக்கான பிரதிநிதி பிரெண்டன் லின்ச் தலைமையிலான குழுவினர் இன்று டெல்லி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசின் அறிவிப்பு!
அடுத்த செய்தி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட ஐ.என்.எஸ் ‘ஆண்ட்ரோத் கப்பல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஜூன் 7, 2025
உலகம்

லண்டனில் பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 17 வயது இளைஞர் கைது!

செப்டம்பர் 20, 2025
உலகம்

ஈரான் – இஸ்ரேலிலுள்ள வெளிநாட்டு மக்கள் வெளியேற்றம்!

ஜூன் 18, 2025
உலகம்

ஈரான் வான்வெளி மீள்திறப்பு -மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து ஆரம்பம்!

ஆகஸ்ட் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?