இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப்பயணத்தைக் கௌரவிக்கும் விதமாக, தமிழக அரசாங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாராட்டு விழா சென்னை நேரு விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வருகின்றது.
குறித்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா சினிமாவிலும் முக்கியமான இசை ஆளுமையாக விளங்கும் இளையராஜா, ஆயிரக்கணக்கான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அத்துடன் 82 வயதிலும் திரைப்படங்களுக்கு இசையமைத்துவரும் இவர், சிம்பொனி இசை நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
