ஐ.சி.சி டி20 தரவரிசை பட்டியலில் இலங்கை அணி 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
இதன்படி 8ஆவது இடத்திலிருந்த இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை பின் தள்ளி 7ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி குறித்த தரவரிசைப்பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.
மேலும் அவுஸ்திரேலியா அணி 2ஆவது இடத்திலும் இங்கிலாந்து அணி 3ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
