முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் தொடர்பான விடயங்கள் கடந்த காலங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் நேற்றையதினம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து செய்யப்படும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராம அரச இல்லத்திலிருந்து வெளியேறி தங்காலை பெலியத்தவிலுள்ள தனது இல்லத்திற்கு சென்றடைந்தார்.
மேலும் இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவருடைய எக்ஸ் தள பக்கத்தில், தனது தந்தை மகிந்த ராஜபக்ச ஆரம்பித்த இடத்திற்கே மீளவும் திரும்பியுள்ளார் என பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது…
“இன்று, என் தந்தை கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலைக்குத் திரும்புகிறார், இது அனைத்தும் ஆரம்பித்த இடம். உண்மையான பலம் நமது வேர்களிலிருந்து வருகிறது, பதவிகள் மற்றும் சலுகைகளிலிருந்து அல்ல என்பதை நினைவூட்டுகிறது.” என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
