பரஸ்பர முதலீட்டை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இந்தியா – இஸ்ரேல் இடையே ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவுடன் இதுபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு நாடாக இஸ்ரேல் அமைந்துள்ளது என்று இஸ்ரேலின் நிதி அமைச்சு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
புது டெல்லியில் இரு நாடுகளின் நிதி அமைச்சர்களும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம், இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்த உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
