திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் ஆலய தேர்திருவிழாவின் போது வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது, அதன்போது வெடிக்காமல் இருந்த ஒரு பட்டாசினை ஒரு நபர் காலால் உதைத்துள்ளார், அதில் பட்டாசு இன்னொருவர் மீது பட்டு வெடித்துள்ளது.
படுகாயமடைந்த குறித்த நபர் தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
