Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ராவண எல்ல வனப்பகுதி விபத்தின் சாரதியின் இரத்த மாதிரிகள் நாளை பரிசோதனை செய்யப்படும்!

செப்டம்பர் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ராவண எல்ல வனப்பகுதியில் சுமார் ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதியினுடைய இரத்த மாதிரிகள் நாளை மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்படும் என எல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.

தங்காலை நகரசபையின் ஊழியர்கள் குழுவொன்று நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று மீண்டும் தங்காலைக்கு தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் திரும்பிக் கொண்டிருந்த பேருந்தொன்று, கடந்த 4 ஆம் திகதி இரவு எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் 15 ஆவது மைல்கல் பகுதியில் சொகுசு வாகனமொன்றுடன் மோதி பின்னர் வீதியின் அருகே இருந்த தடுப்புச் சுவரில் மோதி ராவண எல்ல பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 15 பேர் பலியானதுடன், 18 பேர் காயமடைந்தனர்.

சுற்றுலாப் பேருந்தின் சாரதியான தங்காலை, ஹெனகடுவவைச் சேர்ந்த சிரத் திமந்த என்ற இளைஞரும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.

குறித்த பேருந்தை செலுத்தும் போது அதன் சாரதி போதைப்பொருள் அல்லது மதுபானம் பயன்படுத்தியிருந்தாரா என்பதை அறிய, அவரது இரத்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு சமர்ப்பிக்கப்படும் என்று எல்ல காவல்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி மித்தெனியவில் பாரிய வெடிபொருட்கள் மீட்பு!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

டிசம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய ரீதியில் இரண்டாம் இடம்பெற்ற மாணவி அரோனிக்கா ரேச்சல்

செப்டம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் யாழில் கைது!

நவம்பர் 10, 2025
இலங்கை

கொழும்பில் பகுதியில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்ப்பு!

செப்டம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?