Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாசாரம் தொடர்ந்தும் வியாபித்து வருகின்றது-சஜித்!

செப்டம்பர் 6, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

“நாடு முழுவதும் துப்பாக்கிச்சூடு மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாசாரம் தொடர்ந்தும் வியாபித்து வருகின்றது.

இந்தச் சூழ்நிலையில், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், அரசை நேர்மறையாக விமர்சிக்கும் தரப்பினரைக் கூட அச்சுறுத்தும் திட்டம் ஒன்று சூட்சுமமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பை தக்சலாவா என்ற யூடியூப் சேனலை நடத்தும் இராஜ் வீரரத்ன மற்றும் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வீடுகளுக்கு அருகில் இலக்கத் தகடு இல்லாத மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு நபர்கள் வந்த சம்பவம் இதற்குக் கிட்டிய சம்பவமாகக் காணப்படுகின்றது.

இந்தச் சூழ்நிலையில், சிவில் குடிமக்கள், ஊடகத்துறையில் உள்ளவர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாதுகாப்பின்மை உணர்வு நிலவுகின்றது.”- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று ஊடகங்களுக்கு விசேட கூற்றை முன்வைத்து தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,“தற்போதைய ஆளும் தரப்பினர் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மேசைகள் மற்றும் நாற்காலிகளைக் கொண்டு வாருங்கள், தேசிய பாதுகாப்பு குறித்த டியூசன் வகுப்புகளை எடுக்கின்றோம் எனப் பிரஸ்தாபித்திருந்தனர்.

அப்போது அவ்வாறு சொன்ன இந்த அரசியல் கட்சி நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்தக் கொலைக் கலாசாரம் நகரம் நகரமாக வியாபித்து வருகின்றன.

சமூக ஊடக ஆர்வலர்களுக்கு எதிரான இத்தகைய அச்சுறுத்தல்கள், நாட்டின் அரசமைப்பின் உச்ச சட்டமான மனித வாழ்வுரிமையை மீறும் செயலாக அமைந்து காணப்படுகின்றது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான இந்த அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்தின் மீது விழுந்த பெரும் அடியாகும். இதைத்தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இராஜ் வீரரத்ன மற்றும் மிலிந்த ராஜபக் ஷ ஆகியோரின் வீடுகளுக்கு அருகில் வருகை தந்த, இந்த அடையாளம் தெரியாத சைக்கிள் ஓட்டுநர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அரசு செய்யும் நல்ல விடயங்களைப் பாராட்டவும், தவறான விடயங்களை விமர்சிக்கவும் சகல குடிமக்களுக்கும் உரிமை காணப்படுகின்றது. அரசின் நடவடிக்கைகளில் எது சரி எது தவறு என்பதைச் சுட்டிக்காட்டுவது 220 இலட்சம் மக்களினதும் பொறுப்பாகும்.

இந்த உரிமை மக்களுக்குச் சொந்தமான உரிமையானபடியால், அரசுக்கோ அல்லது குண்டர்களுக்கோ இதனைப் பறிக்க முடியாது.

சமூகத்தை அச்சுறுத்தி வரும் இந்தக் கொலைக் கலாச்சாரத்தை முறியடிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக எங்களால் பெற்றுத் தர முடியுமான அதிகபட்ச பக்க பலத்தை பெற்றுத் தருவோம்.

அரசால் செவிமெடுக்க முடியாத விடயங்கள் யூடியூப் அலைவரிசைகளில் செல்லப்படும் போது, அவ்வாறு விடயங்களை முன்வைப்பவர்களை அச்சுறுத் துவதற்குப் பதிலாக, அரசின் தவறுகளைச் சரி செய்து கொண்டு, நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பணியையே முன் னெடுக்க வேண்டும்.

சமூக ஊடகங்களிலும் சுதந்திர ஊடகங்களிலும் உண்மையைப் பேசும் ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்தி என்றும் முன்னிற்கும்.”

முந்தைய செய்தி மட்டக்களப்பில் வாடகை ஆட்டோவில் ஆட்டை திருடிய நபர் ஆட்டுடன் ஓட்டம்!
அடுத்த செய்தி காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் அமைக்கப்பட்டுவரும் வடிகான் தொடர்பில் முறைபாடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ் அரியாலை பகுதியில் போராட்டம் முன்னெடுப்பு!

அக்டோபர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் மாவட்டம் – வல்வெட்டித்துறை நகர சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொன்வேவா பகுதியில் கைவிடப்பட்ட  நிலையில் பெண் குழந்தை ஒன்று மீட்ப்பு!

அக்டோபர் 3, 2025
இலங்கை

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒரு பிள்ளையின் தந்தை பலி

செப்டம்பர் 1, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?