ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்
.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்றக்கொண்டு வருகின்றனர்


