2026ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் குறித்த தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயற்பட முன்னாள் இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனியை பிசிசிஐ அணுகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற டி20 உலகக் கிண்ண தொடரின் போது, மஹேந்திர சிங் தோனி இந்திய அணியின் ஆலோசகராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.