Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பாதிக்கப்பட்ட பயணி ஒருவருக்கு 1,000 டொலர் இழப்பீடு!

ஆகஸ்ட் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

விமானசேவை ரத்து செய்யப்பட்டமையால், பாதிக்கப்பட்ட பயணி ஒருவருக்கு 1,000 டொலர் இழப்பீட்டை வெஸ்ட்ஜெட் விமான நிறுவனம் வழங்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஓவன் லாரோ என்ற பயணி, ரீஜினா நகரிலிருந்து ஒட்டாவாவுக்குச் செல்லவிருந்த நிலையில், அவர் பயணிக்கவிருந்த வெஸ்ட்ஜெட் விமானசேவை ரத்து செய்யப்பட்டது.

அதனால், அவரது பயணமானது 21 மணித்தியாலங்கள் தாமதமானது.

இது தொடர்பாக அவர் கனடிய போக்குவரத்து முகவரகத்திடம் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த விமானத்தினை அன்றைய தினம் செலுத்த வேண்டிய விமானி உடல்நலக்குறைவு காரணமாக திடீரென பணிக்கு வரவில்லை என்றும், மாற்று விமானி கிடைக்காததால் அன்றைய விமானசேவை ரத்து செய்யப்பட்டதாகவும் வெஸ்ட்ஜெட் நிறுவனம் வாதிட்டது.

இது ஒரு “பாதுகாப்பு நலன்” தொடர்பான பிரச்சினை என்பதால், பயணிக்கு இழப்பீட்டினை வழங்கத் தேவையில்லை என்றும் வெஸ்ட்ஜெட் நிறுவனம் கூறியது.

வெஸ்ட்ஜெட் நிறுவனம் முன்வைத்த இந்த வாதத்தினை, கனடிய போக்குவரத்து முகவரகம் ஏற்க மறுத்தது.

வெஸ்ட்ஜெட் விமான நிறுவனம், விமானச்சேவையில் ஏற்படக்கூடிய பணியாளர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு, முறையான மாற்றுத் திட்டத்தைக் கொண்டிருந்ததா என்பதை நிரூபிக்கவில்லை என்றும் அது தொடர்பில் போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும், கனடிய போக்குவரத்து முகவரகம் தெரிவித்தது.

இதனால், வெஸ்ட்ஜெட் விமான நிறுவனம் பாதிப்புக்குள்ளான பயணியான ஓவன் லாரோவுக்கு 1,000 டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என கனடிய போக்குவரத்து முகவரகம் உத்தரவிட்டது.

வெஸ்ட்ஜெட் நிறுவனம் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வானது, இந்த வழக்கை விசாரித்ததுடன், இந்த விடயம் தொடர்பில் கனடிய போக்குவரத்து முகவரகம் மேற்கொண்ட முடிவில் தவறு எதுவும் இல்லை எனத் தீர்ப்பளித்துள்ளதுடன், வெஸ்ட்ஜெட் நிறுவனம் தொடர்ந்த வழக்கினைத் தள்ளுபடி செய்துள்ளது.

முந்தைய செய்தி ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளும் முடிவு-அவுஸ்திரேலிய!
அடுத்த செய்தி வேலைவாய்ப்புகளையும், பொருளாதாரத்தையும் பாதுகாப்பதில் கனடா பின்தங்கி உள்ளது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவிற்கு வழங்கும் மின்சாரத்திற்கான 25% கூடுதல் வரியை நிறுத்தியது ஒன்ராறியோ!

மார்ச் 11, 2025
அண்மைய செய்திகள்கனடா

ஒன்ராறியோ முதன்மை சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை விரிவுபடுத்த, 235 மில்லியன் டொலர்கள் – புதிய நிதி ஒதுக்கீடு!

ஜூன் 23, 2025
கனடா

பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய போர் சீருடைகள்

டிசம்பர் 26, 2025
1
அண்மைய செய்திகள்கனடா

ஜேர்மனியுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் கனடா.

பிப்ரவரி 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?