Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஆலயங்களில் ஒலிபெருக்கி பாவணைக்கு தடை – ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார்

ஆகஸ்ட் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
A set of loudspeakers on the public square
SHARE

கத்தோலிக்க தேவாலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால், ஒலி சூழல் மாசு எனும் தீமையால் மாணவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இச் செயற்பாடு எம் சமூகத்தின் பெரும் பிரச்சினையாகக் கருதப்படுகின்றது என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் பத்திரிகைக்கு வழங்கிய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மறைமாவட்டத்தில் ‘புதிதாய் வாழ்வோம்’ என்ற தலைப்பில் 2016ம் ஆண்டு நடைபெற்ற மேய்ப்புப்பணி மாநாட்டில் எடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான தீர்மானங்களில் ஒலிபெருக்கிப் பாவனை தொடர்பான விடயம் முக்கியமான இடத்தைப் பெற்றது.

மாநாட்டின் தீர்மான இலக்கம் 4 கூறுவதாவது, ஆலய வழிபாடுகளின் போது பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி சாதனங்களினால் ஆலய சுற்றாடலில் வாழும் மாணவர்கள். பாடசாலைகள், நோயாளர்கள், வயோதிபர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க பின்வரும் ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

நாட் திருப்பலிகள், ஞாயிறு திருப்பலிகளின் போது ஆலயத்திற்கு உள்ளே மட்டும் கேட்கும் படியாகவும், திருநாட் காலங்களில் ஆலய வளாகத்துக்குட்பட்டதாகவும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

இம்மாநாட்டின் இத்தீர்மானத்தைத் தொடர்ந்து யாழ் மறைமாவட்டத்தில் பல ஆலயங்களில் இந் நடைமுறை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சில ஆலயங்களில் இக்கட்டுப்பாடானது உதாசீனப்படுத்தப்பட்டமையால், இன்று இது ஓர் சமூகப் பிரச்சினையாக மாறிவிட்டது. பலர் இதுபற்றி தமது கடுமையான கண்டனங்களையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்கள். யாழ். அரச அதிபர் கூட ஒலிபெருக்கிப் பயன்பாட்டில் கோவில்கள். ஆலயங்களில் கட்டுப்பாட்டினைப் பேணுமாறு வலியுறுத்தியுள்ளார்.

தற்போது ஒலிபெருக்கிப் பாவனை யாழ் திருஅவையினுடைய பிரச்சினையாக மட்டுமல்லாது ஒலியால் சூழல் மாசடைதல் எனும் சமூக தீமையாக மாறிவிட்டதால், இச் சமூக சீர்திருத்தச் செயலைச் செய்வதற்கு அனைத்துக் குருக்களும், துறவிகளும், பொது நிலையினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, வீதிகளில் ஒலிபெருக்கி பாவிப்பதை முற்றாகத் தவிர்க்க உதவுமாறும், மேற்படி மாநாட்டுத் தீர்மானத்தை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறும் கண்டிப்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் என யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அவர்கள் வேண்டியுள்ளார்.

முந்தைய செய்தி இலங்கையில் மீண்டும் ஆரம்பித்துள்ள மலேரியா தொற்று!
அடுத்த செய்தி பியர்சன் விமான நிலையத்தின் ஊடக பயணித்த பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மட்டக்களப்பில் இளம் மீனவர் ஒருவரின் சடலம் மீட்பு

ஜனவரி 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு பணி சனிக்கிழமை ஆரம்பம்

அக்டோபர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய ஆசிரியர் இடமாற்ற கொள்கைகளை விரைவாக மறுசீரமைக்க நடவடிக்கை…..

மார்ச் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சண்டிலிப்பாயில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனையில் ஈடுபட்ட வீதியோர விற்பனை நிலையங்கள்

ஏப்ரல் 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?