தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் ராம். இவருடைய இயக்கத்தில் “கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி” உள்ளிட்டயதார்த்தமான படங்களை இயக்கியிருந்தார்.
இவருடைய இயக்கத்தில் நடிகர் மிர்ச்சி சிவாவினுடைய நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் “பறந்து போ”
இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பறந்து போ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 5ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
