கல்முனை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும் அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த மோட்டார் காரும் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், அக்கரைப்பற்று மத்திய தபால் நிலையத்திற்கு முன்பாக மோதியதில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற மோட்டார் கார், வீதியின் நடுவில் உள்ள மின்கம்பத்தைத் தாண்டி மறுபக்கமாகச் சென்று, கல்முனை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதென முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
