Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் இன்று அகழ்ந்தெடுக்கப்பட்ட 05 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள்

ஜூலை 25, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளிலிருந்தும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 02 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 05 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 05 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 25மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 16 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 20ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 05 நாட்களாக முன்னெடுக்கப்படும் அகழ்வு பணியில் இன்றைய தினத்துடன் 25 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் , 16 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 29 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 5 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 81 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது, இதுவரையில் 90எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கடந்த சில தினங்களில் அடையாளம் காணப்பட்ட சில எலும்பு கூட்டு தொகுதிகள் முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமைக்கான சான்றாக அவை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை எலும்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்ட முறைமை, பிரேத பெட்டியில் வைக்கப்பட்டமை ஆகியவை காணப்படுவதனால் , அவை முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டமையால் , அவற்றை மீளவும் மண் போட்டு மூடப்பட்டது.

அத்துடன் , மேலும் மனித புதைகுழிகள் காணப்படலாம் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, அவ்விடங்களில் துப்பரவு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது

அப்பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இலங்கையில் பல தொகை பெறுமதியான போதைப்பொருளுடன் கனேடிய பிரஜை கைது!
அடுத்த செய்தி செம்மணிக்கு நீதி கோரி நாளை ஐ.நா சபை வளாகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சோலார் மின் திட்டத்திற்கான கட்டணம் அதிகரிப்பு!

ஜூன் 22, 2025
இலங்கைமுதன்மை செய்தி

யாழ்.தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்றுவதற்கு இரண்டாவது நாளாகவும் போராட்டம்!

பிப்ரவரி 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு கேப்பாப்புலவு- பிலவுக்குடியிருப்பில் சந்திரன் நகர வீடுகள் மக்களிடம் கையளிப்பு!

மே 28, 2025
இலங்கை

மன்னாரில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் நிவாரணம் வழங்கி வைப்பு.

டிசம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?