இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் சூழலில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறைகளிலும் பணிபுரிகின்றனர். குறிப்பாக ஐ.டி. துறையைத் தாண்டி, பல துறைகளிலும் இரவு நேர வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
ஆனால், “இரவு வேலை பெண்களுக்கு சாதகமா?” என்ற கேள்விக்கு, பல ஆய்வுகளும் “இல்லை” என்ற பதிலையே தருகின்றன.
இரவு பணியை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்? என்னென்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆராய்வோம்.
தூக்க சுழற்சி பாதிப்பு
பெண்கள் இரவில் பணியாற்றும்போது, மெலடோனின் உற்பத்தி குறைந்து, கார்டிசோல் அளவு அதிகரித்து, தூக்க சுழற்சி பாதிக்கப்படுகிறது. இது மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கை
சமீபத்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இரவு வேலை செய்யும் பெண்களுக்கு ஆஸ்துமா ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என கூறப்பட்டுள்ளது.
ஹார்மோன் சமநிலை சீர்குலைவு
இரவு வேலை வழக்கமாக இருந்தாலும், அதன் தாக்கம் நேரடியாக ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும். இதன் விளைவாக மாதவிடாய் குறைபாடுகள், முடிவில்லா சோர்வு, மனஅழுத்தம் போன்றவை உருவாகும் வாய்ப்பு அதிகம்.