Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு – சுதந்திரமாக செல்ல அனுமதிக்குமாறு மக்கள் கோரிக்கை!

ஜூலை 20, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கடுமையான இராணுவ கண்காணிப்பின் கீழ் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் – சுதந்திரமாக செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சூழ கடுமையான இராணுவ கண்காணிப்பின் கீழ் உள்ளதாகவும் , நேர மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையால் , ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபட முடியவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்

அதேவேளை கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கி இன்னமும் உத்தியோகபூர்வ கடிதம் வழங்கப்படாமையால் , எந்நேரமும் ஆலயத்திற்கு செல்வதனை இராணுவத்தினர் தடை விதிக்கலாம் என்ற அச்சம் தமக்கு உள்ளதாகவும் தெரிவித்தனர் .

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினம் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் கடந்த வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளனர்.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட கடந்த 27ஆம் திகதி அனுமதித்த இராணுவத்தினர் மீண்டும் 28ஆம் திகதி பாதுகாப்பு காரணங்கள் என கூறி ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையிலே வியாழக்கிழமை முதல் ஆலயத்திற்கு செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்நிலையத்தில் ஆலயத்திற்கு மக்கள் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தினரால் உத்தியோகபூர்வ கடிதம் இதுவரை வழங்கப்படவில்லை. உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்காதமையால் எந்நேரமும் பாதுகாப்பு காரணம் என கூறி ஆலயத்திற்கு செல்ல இராணுவத்தினர் தடை விதிக்கலாம் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் காணப்படுகிறது

அத்துடன் அடுத்து வரும் வாரங்களின் ஆலய திருவிழா காலம் என்பதனால் , ஆலய சூழலை துப்பரவு செய்து திருவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்ற போதிலும், ,” எப்போது மீண்டும் இராணுவத்தினர் தடை விதிப்பார்களோ ” என்ற அச்சத்துடனையே துப்பரவு பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.

அத்துடன் ஆலயத்திற்கு நேர கட்டுப்பாட்டுடன் அனுமதிப்பதனால் , திருவிழாவை சிறப்பாக செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது எனவே நேர கட்டுப்பாட்டை முற்றாக தளர்த்தி சுதந்திரமாக இராஜ இராஜேஸ்வரி அம்மனை வழிபட இராணுவத்தினர் அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன

முந்தைய செய்தி ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து
அடுத்த செய்தி யாழில் மோதல் – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியா நெளுக்குளத்தில் 12 வாகன பற்றரிகளுடன் ஒருவர் கைது.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

இவ் ஆண்டில் இதுவரை 49பேர் இலஞ்சம் தொடர்பில் கைது!

செப்டம்பர் 2, 2025
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்!

செப்டம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வழமைக்கு திரும்பிய களனி ஆற்றின் நீர்மட்டம்!

டிசம்பர் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?