சீனாவில் கழிவறை ஈக்களால் கடந்த ஒரு மாதமாக உயிருடன் புழுக்களை வாந்தியெடுத்த 8 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யாங்சோ நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு விநோதமான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக, அவர் சுமார் 1 சென்டிமீட்டர் நீளமுள்ள புழுக்களை உயிருடன் வாந்தியெடுத்து வந்துள்ளார்.
நோய்த்தொற்றுக்கான காரணத்தை வைத்தியர்களால் உடனடியாகக் கண்டறிய முடியவில்லை. சிறுமியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், சூசோ பல்கலைக்கழக குழந்தைகள் வைத்தியசாலையின் மருத்துவர்கள், புழுக்களின் மாதிரிகளை உள்ளூர் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திற்குப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதன்போது பரிசோதனையின் முடிவில், இந்த விபரீதத்திற்குக் காரணம் வீடுகளில் உள்ள கழிவறைகள் மற்றும் அடைபட்ட வடிகால்களில் பெருகும் ‘கழிவுநீர் ஈக்கள்’ என்பது தெரியவந்தது.