யாழ்ப்பாணத்தில் குறி சொல்லும் ஆலயத்திற்கு சென்று அங்கு பூசாரி வழங்கிய இளநீரை பருகியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 31 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில் அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் ஆலயத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார்.
ஆலய பூசாரி அவரது பிணியை போக்குவதாக கூறி இளநீர் ஒன்றை வழங்கியுள்ளார். அதை அருந்தியவர் சிறிது நேரத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார்.
அதனை அடுத்து நோயாளர் காவு வண்டி அழைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துவிட்டார் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதனை அடுத்து வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து. பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேட்கொண்டு வருகின்றனர்.