தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஈரானிய உச்சத் தலைவர் அல் கொமெய்னிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட உயர் இராணுவத் தளபதி அலி ஷத்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்தன.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் இராணுவத் தளபதியுமான அலி ஷத்மானி, துல்லியமான உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து, மத்திய தெஹ்ரானில் ஐ.ஏ. எஃப் தாக்குதலில் கொல்லப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.