உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கு அடுத்து உயர்ந்த நிலையில் சீனா உள்ள சூழலில், அதன் மக்கள் விடுதலை இராணுவத்தில் முக்கிய பதவிகளை வகிக்க கூடிய அதிகாரிகள் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, சீனாவின் உயரிய இராணுவ தலைவரான ஜெனரல் ஜாங் யூக்சியா என்பவர் கடந்த 24ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
இராணுவத்தில் தீவிர விசுவாசம் கொண்ட அதிகாரி என பெயர் பெற்றவரான ஜாங் கைதுசெய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அவர் ஏன் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்? என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு உயரதிகாரியான ஜெனரல் லியு ஜென்லி என்பவரையும் ஜின்பிங் அரசு கைதுசெய்துள்ளது என இன்று தகவல் வெளியாகியுள்ளது.
சமீப ஆண்டுகளாக சீன இராணுவத்தில் முக்கிய நபர்களை ஜின்பிங் அதிரடியாக நீக்கி வருகின்றார்.
2022ஆல் 6 உறுப்பினர்களை கொண்டிருந்த அந்த ஆணையத்தின் எண்ணிக்கை, பின்னர் 4 ஆக குறைந்தது.
தற்போது, ஜின்பிங் தலைமையின் கீழ் ஒரேயொரு அதிகாரியுள்ளார்.
அதனால், அந்த ஆணையம் தொடர்ந்து செயல்படுவது அல்லது கலைக்கப்படுவது என்பது ஜின்பிங்கின் வசமேவுள்ளது.
அனைத்து உறுப்பினர்களையும் ஜின்பிங் கவனித்து தேர்வு செய்த நிலையில், உறுப்பினர்கள் நீக்கம் மற்றும் கைது போன்ற நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன
