ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் இன்னும் நீதி நிலைநாட்டாமை தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
முறையான விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுவதாக தற்போதைய அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.
எனினும் அது, இதுவரை நிறைவேற்றப்படவில்லை என, கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஆராதனையில் பங்கேற்ற போது தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு உதவும் வகையிலும், வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அலுவலகத்தை அமைப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இதுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை.
எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் 6 வருடங்களாக இந்தப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமல் உள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.