மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கு இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மன்னார் நீதிமன்ற நீதவான் மற்றும் அழைக்கப்பட்ட நிறுவனத்தினரும் குறித்த சதொச மனித புதைகுழி பகுதியை இன்றைய தினம் காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
பிரதேசத்தை சுத்தப்படுத்துவதாகவும்,நிரம்பியுள்ள நீரை அகற்றுவதற்கு நகர சபை இனங்கிக்கொண்டுள்ளதன் அடிப்படையில், குறித்த நீரை அகற்றுவது என்றும், புதைகுழியை பகுதி அளவில் மூடுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது ஏற்கனவே எடுக்கப்பட்ட மண்ணை சதொச நிறுவனத்திடம் காணப்படுகின்றதா?,அது எங்கே இருக்கிறது போன்ற விடையங்களை பொலிஸார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும், தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில்,இந்த வழங்கு மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி மேலதிக நடவடிக்கைக்காக அழைக்கப்படவுள்ளது.என தெரிவித்தார்.
இதன் போது காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் கருத்துக்களை தெரிவித்தார்.
