46 கிலோகிராம் நிறையுடைய குஷ் ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த 21 வயதுடைய விமானப்பணிப்பெண் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று நீர்க்கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது,
அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் கடந்த 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு விமானத்தில் வந்துள்ளார். இந் நிலையில்,
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அவரிடம் இருந்து 46 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.