கனடாவின் லிபரல் கட்சியில் புதிய தலைவராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஏதேனும் காரணங்கள் ஏற்படின் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான அதிகாரத்தை எம்.பிக்களுக்கு வழங்குவது குறித்து லிபரல் எம்.பிக்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் நீண்டகால பதவி விலகல் விவகாரத்துக்குப் பிறகு, சில லிபரல் எம்.பிக்கள், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க, கட்சித் தலைவரை நீக்குவதற்கான அதிகாரத்தை எம்.பிக்களுக்கு வழங்கும் “ரிஃபார்ம் ஆக்ட்” சட்டத்தை கட்சி தங்களின் விதிகளில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். எம்.பிக்கள் பெரும்பான்மையுடன் தலைவரை நீக்குவதற்கான இந்த சட்டம், தற்போதைய பாராளுமன்றத்தில் லிபரல் எம்.பிக்களுக்கு கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது
மார்க் கார்னி, முன்னாள் கனடா மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கிகளின் ஆளுநராகப் பணியாற்றியவர், அரசியல் அனுபவம் குறைவாக இருப்பதால், சில எம்.பிக்கள் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான அதிகாரத்தை எம்.பிக்களுக்கு வழங்க வேண்டும் எனக் கருதுகின்றனர். இது, எதிர்காலத்தில் கட்சியின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த உதவும் என அவர்கள் நம்புகின்றனர்.
மார்க் கார்னி, தனது பிரச்சாரத்தின் போது, அரசாங்க செலவுகளை கட்டுப்படுத்தல், வீட்டு வசதிகளை மேம்படுத்தல், வர்த்தக கூட்டாளிகளைப் பரந்துபடுத்தல் மற்றும் குடியேற்ற எண்ணிக்கையை தற்காலிகமாக கட்டுப்படுத்தல் போன்ற பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். இவை, பொதுமக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை அதிகாரிக்க காரணமாக அமைந்தது
எனினும், அவரது அரசியல் அனுபவம் குறைவாக இருப்பது மற்றும் சில எம்.பிக்கள் அவரை “ட்ரூடோவின் தொடர்ச்சி” எனக் கருதுவது போன்ற காரணங்களால், அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான அதிகாரத்தை எம்.பிக்களுக்கு வழங்குவது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த விவாதங்கள், லிபரல் கட்சியின் எதிர்காலத் தலைமைத் தேர்வுகள் மற்றும் கட்சியின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.என்பதும் குறிப்பிடத்தக்கது
