Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக வாகனங்களைப் பயன்படுத்தியவர்களின் பெயர் பட்டியல் விரைவில் வெளியாகும் – ஜனாதிபதி

ஏப்ரல் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களது பட்டியலொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கந்தளாய் நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைக்குச் சொந்தமான வங்கிக்கணக்கிலிருந்து அநாவசியமாகப் பணத்தை பெற்று அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியமைக்காக ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்த வங்கிக் கணக்கை நிறைவுறுத்தி பணம் பெறுமாறு தாமே அவருக்கு அறிவுறுத்தல் வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது கூறுகிறார்.

அவ்வாறெனில் தற்போது கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னைய காலங்களில் இவ்வாறான உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியாத நிலை காணப்பட்டது.

தற்போது அதனை நாம் மாற்றியுள்ளோம்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கோ, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கோ வராதவர்கள் தற்போது விசாரிக்கப்படுகின்றனர்.

விசாரணைகளை முன்னெடுக்க உரிய சட்டஅமுலாக்க நிறுவனங்களுக்கு நாம் சுதந்திரம் வழங்கியுள்ளோம்.

முன்னர் காவல்துறையினருக்கு பயந்து குற்றவாளிகள் தலைமறைவாகினர்.

தற்போது முறையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது காவல்துறைமா அதிபரே தலைமறைவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், கடந்த காலங்களில் வாகன இறக்குமதி தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் வாகனங்களைக் கொண்டுவந்தனர்.

அவர்கள் அத்தகைய வாகனங்களைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்தினர்.

அதிகாரத்தில் இருந்தவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்படவில்லை.

ஏனையோருக்கே சட்டம் உரித்தானது என அவர்கள் செயற்பட்டனர்.

எனவே, அவ்வாறு சட்டவிரோதமாக வாகனங்களைப் பயன்படுத்திய சிலர் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளனர்.

அவ்வாறானவர்களின் பெயர்கள் அடங்கிய நீண்ட பட்டியலொன்று உள்ளது

இது அரசியல் பழிவாங்கல் அல்ல, நாம் சட்டத்தை முறையாக செயற்படுத்துகிறோம் என்பதையே இது காட்டுகிறது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

முந்தைய செய்தி பாதாம் தரும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ….
அடுத்த செய்தி தலதா மாளிகைக்கு இராணுவத்தினரின் விசேட பாதுகாப்பு…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் மத சுதந்திரம் மற்றும் நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வு செயலமர்வு

ஏப்ரல் 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் இடம் பெற்ற மே தின நிகழ்வுகள்…

மே 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா

அக்டோபர் 4, 2025
இலங்கை

யாழில். வாளுடன் டிக் டொக் வீடியோ பதிவிட்ட சிறுவன் கைது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?