தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நடாத்திய மலிவு விற்பனையும் கண்காட்சியும் இன்று செட்டிகுளம் பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றிருந்தது.
குறித்த மலிவு விற்பனையும், கண்காட்சியானது செட்டிகுளம் சமுர்த்தி வங்கி மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரால் இணைந்து நடாத்தப்பட்டிருந்தது.
இந்நிகழ்வினை வைபவ ரீதியாக பிரதேச செயலாளர் கே.சுலோஜினி மற்றும் மாவட்ட சமுர்த்தி வங்கி சிரேஸ்ட முகாமையாளர் வில்வராசா ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.