அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் “சைக்கிள் சின்னத்தில்” தமிழ்த் தேசியப் பேரவையில், யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, அரசியல் செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், உள்ளூராட்சி சபைகளுக்கான கட்சியின் வேட்பாளர் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.