Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மோடியின் இலங்கை விஜயத்தின் போது முக்கிய திட்டங்கள் கைச்சாத்திடப்படும் …..

மார்ச் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜனாதிபதி அநுர குமார திசநாயக கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்து இந்திய பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக இந்திய பிரதமர் மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி வருகையின்போது திருகோணமலையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மஹிந்த ஜெயதிஸ்ஸ கூறும்போது, இலங்கையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தம் கடந்த மாதம் இறுதி கட்டத்தை எட்டியது. இந்த ஒப்பந்தம் பிரதமர் மோடி வருகையின்போது கையெழுத்தாகும்.

இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே திருகோணமலையில் உள்ள சம்பூரில் 50 மெகாவோட் (நிலை 1) மற்றும் 70 மெகாவோட் (நிலை 2) திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாடு ஆகியவை, இலங்கை மின்சார சபை, இந்திய தேசிய வெப்ப மின் கழகத்தின் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்பட உள்ளது.

முன்னதாக, இந்த இடத்தில் ஒரு நிலக்கரி மின் நிலையத்தை இந்தியா கட்ட இருந்தது. தற்போது அது புதிய கூட்டு முயற்சியில் சூரிய மின் நிலையமாக மாற்றப்படுகிறது.

முந்தைய செய்தி டொரொண்டோ பல்கலைக்கழக வளாகத்தில் சடலம் மீட்பு !
அடுத்த செய்தி இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிட தடை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மாலைதீவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி

ஜூன் 29, 2025
இலங்கை

சுதந்திர தினத்தன்று சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 16 ஏப்ரல் 2026

ஏப்ரல் 16, 2026
இலங்கை

போலி ஆவணம் மூலம் அரச காணியை விற்பனை செய்து மோசடி – அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?