தற்போதைய புதிய அரசாங்கத்தில் “தூய இலங்கை” என்ற தேசிய வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி இன்றைய சிறுவர்கள் நாளைய சிறுவர்களாக உருவாகும் தேசத்தின் பிள்ளைகளுக்கு நல்லதொரு வளமான நாட்டை பரிசளிப்பதோடு, சிறந்த கல்வியை வழங்கும் நோக்கோடு பாடசாலைகளை பௌதீக ரீதியில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த வேலைத்திட்டத்தில் இலங்கை இராணுவம் அவர்களின் பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.
சிறந்த பிரஜைகளை கொடுக்கும் ஒரு இடம் பாடசாலைகள், இதனை கருத்திற் கொண்டே இராணுவ வீரர்களின் அனுபவம், அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி, பிள்ளைகளுக்கு உகந்த பாடசாலை சூழல் இன்று உருவாக்கப்படுகிறது.
“தூய இலங்கை” திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் தற்போது செயல்படுத்தப்படும் பாடசாலை மறுசீரமைப்பு திட்டம் மிகவும் காலத்திற்கேற்ற திட்டமாகும், இத்திட்டமானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வெல்லவாய, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற கிராமப்புற சூழல்களில் வாழும் கிராமப்புற சிறார்களும் பாகுபாடு இல்லாமல் வசதிகளைப் பெற வேண்டிய ஒரு குழு என்பதை அங்கீகரிக்கிறது.
சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை சார்ந்த மனிதாபிமான மனப்பான்மைகளை வளர்க்கவும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை அதிகரிக்கவும், வீணாவதைக் குறைக்கவும், தார்மீக நம்பிக்கையை வலுப்படுத்தவும் பாடசாலை சிறந்த இடமாகும். பாடசாலையின் மூலம் மகிழ்ச்சியான, படைப்பாற்றல் மிக்க, ஒழுக்கமான மற்றும் திறமையான குழுவை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் நமது இராணுவ வீரர்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது என்று கூறலாம்.
‘தூய இலங்கை’ திட்டத்தின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்திற்கு இராணுவம் தொடர்ந்து பங்களித்து வருகிறது, மேலும் இதுவரை நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் மேற்பார்வையின் கீழ் 14,500 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இராணுவத்தினரின் தொழில்நுட்ப உதவி மற்றும் மனிதவள பங்களிப்புடன், பாடசாலைகள் புனரமைக்கும் திட்டம் 2025 பெப்ரவரி 20 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, மொத்தம் 496 பாடசாலைகள் புனரமைக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், புனரமைக்கப்பட வேண்டிய கிட்டத்தட்ட 300 படசாலைகளின் கூரைகள் பழுதுபார்க்கப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு, பாடசாலைகளின் சேதமடைந்த வேலிகள் பழுதுபார்க்கப்பட்டன, பாடசாலைகளுக்கான பாதைகள் புனரமைக்கப்பட்டன, மேலும் பயன்படுத்த முடியாத அண்ணளவாக 5,500 மேசை கதிரைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பாடசாலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், பாடசாலை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து இராணுவம் தொடர்ந்து ஆதரவைப் பெற்றுவருகின்றது. மற்றவர்களுக்கு ஊக்கமளித்து, அரசாங்கத்தின் “ஒரு வளமான நாடு – ஒரு அழகான வாழ்க்கை” என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நாம் கைகோர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை நம்மில் பலருக்கு நினைவூட்டுகிறது.