Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காற்றாலை திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வலுப்பெறும் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை!

செப்டம்பர் 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

“மன்னாரில் முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கு எதிரான போராட்டம் ஓயவில்லை. அது மேலும் வலுப்பெறும். ஏன் மக்கள் வெள்ளமாகக்கூட மாறும்.”

இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

” மன்னாரில் முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்திக்கு எதிராக 53 நாட்கள் தொடர்ச்சியாக மன்னாரில் போராட்டம் இடம்பெற்றது.

கொழும்பிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. எனினும், காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குரிய உபகரணங்களை செயற்படுத்துவதற்குரிய அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

மன்னார் மக்களின் வாழ்வுரிமை மறுக்கப்பட்டுள்ளதா, மன்னார் மக்களின் இறையாண்மை மீறப்பட்டிருக்கின்றதா? என இந்த உயரிய சபையில் கேட்கின்றேன்.” எனவும் செல்வம் எம்.பி. குறிப்பிட்டார்.

தற்போதைய ஜனாதிபதி போராட்ட இயக்கமொன்றில் இருந்து வந்துதான் இன்று அரசாங்க தலைவராகியுள்ளார். ஆனால் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கி, எமது மக்களின் உயிரை துச்சமென மதிக்கும் வகையிலேயே அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

போராட்டம் தொடரும், தற்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. போராட்டம் வலுபெறும். அது மக்கள் வெள்ளமாக மாறும். மக்களின் உயிரை காவு கொள்ளக்கூடிய இந்த மின் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் தியாகங்களை செய்வதற்குகூட மக்கள் தயாராகவே உள்ளனர் என்பதை இச்சபைக்கு தெரியப்படுத்துகின்றேன்.

ஆகவே, இந்த ஜனாதிபதி மக்களை நேசிப்பவராக இருந்தால் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிறுத்த வேண்டும்.” – எனவும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி கொழும்பு தாமரை கோபுரத்தில் புதிய சாகச விளையாட்டு
அடுத்த செய்தி போலி வலைத்தளங்கள் மூலம் பண மோசடி செய்ததாக கூறப்படும் எட்டு சந்தேகநபர்களுக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸாரை கண்டித்த தமிழ் மக்கள் கூட்டணி.

டிசம்பர் 22, 2025
இலங்கை

வவுனியாவில் இஃப்தார் நிகழ்வு

மார்ச் 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அதிகளவு மாத்திரைகளை உட்கொண்ட பெண் உயிரிழப்பு

அக்டோபர் 11, 2025
இலங்கை

பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்

மார்ச் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?