Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் யூடியூப்பருக்கு விளக்கமறியல் நீடிப்பு..

மார்ச் 19, 2025
யாழ்ப்பாணம்
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைந்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பரின் விளக்கமறியலை மல்லாகம் நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது.

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று ,அதன் ஊடாக உதவி செய்வது போன்ற காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.

தேவை தேவைப்படுவோரிடம் நக்கல் , நையாண்டியோடு பேசியே காணொளி எடுத்து பதிவிட்டு வருபவர். அதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பி வந்தன.

இந்நிலையில் , கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் பாடசாலை மாணவியொருவரின் வீட்டிற்கு இரவு வேளை சென்ற குறித்த நபர் , பாடசாலை மாணவியை காணொளி எடுக்க முற்பட்டுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே ,காணொளியில் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து பல்வேறு தரப்பினரும் , தமது கண்டனங்களை தெரிவித்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , இவ்வாறு உதவி செய்பவர்களின் நிதி கையாடுகைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி வந்தனர்.

இந்நிலையில் குறித்த காணொளியில் காணப்பட்ட குடும்பத்தினர் பண்டத்தரிப்பு பகுதியில் வசித்து வரும் நிலையில், அவர்களுடன் சமரசம் பேச சென்ற சமயம் , அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் யூடியூப்பரை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர், கடந்த 10ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுருந்தது.

அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, யூடியூபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்த போதிலும் , பிணை விண்ணப்பத்தை நிராகரித்த மன்று அவரை எதிர்வரும் 02 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

முந்தைய செய்தி ஐயன்கன்குளம் வைத்தியசாலை முன்பாக மக்கள் போராட்டம்…
அடுத்த செய்தி மருதனார்மடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் காரைநகர் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள சடலம்

ஆகஸ்ட் 24, 2026
இலங்கை

தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி பறக்க விடப்பட்டது.

பிப்ரவரி 4, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

பல மில்லியன் டொலர் கடன்: Goodfood நிறுவனத்திற்கு நீதிமன்ற பாதுகாப்பு!

ஆகஸ்ட் 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளை திருடிய இருவர் கைது

ஏப்ரல் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?