கடல் உணவான மீனில் தான் பல உடல் நல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது.
முக்கியமாக அவை இதயத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் அது மீனோடு மட்டும் நின்று விடுவதில்லை.
மீனை போல் இன்னும் பல கடல் உணவுகளினாலும் பல நன்மைகள் அடங்கியுள்ளது. அப்படி ஒரு வகை உணவு தான் இறால்.
இறால்கள் நன்னீரில் வளரக்கூடியவை. இவற்றில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய சத்துக்கள் ஏராளமாக காணப்படுகின்றன.
வாரந்தோறும் இறாலைச் சாப்பிட்டால் எவ்வாறான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.
விட்டமின் B12 உடலில் மிகவும் குறைவாக இருந்தால், உடல் பலவீனம், சோர்வு மற்றும் மன இறுக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே உடலில் விட்டமின் B12 குறைபாடு ஏற்படக்கூடாதெனில், இறாலை வாரம் ஒருமுறை உட்கொண்டு வாருங்கள்.
தற்போது புற்றுநோயால் ஏராளமானோர் பாதிக்கப்படுவதோடு, உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன. இறால்களில் செலினியம் அதிகமாக உள்ளன. இந்த செலினியம் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது
நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இறாலை வாரந்தோறும் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தலாம்.
இவ்வாறாக ஏராளமான நன்மைகளைக் கொண்ட இறாலை வாரந்தோறும் உட்கொண்டு ,அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.