Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

உணவு ஒவ்வாமையினால் 31 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மார்ச் 11, 2025
மட்டக்களப்பு
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டு கரடியனாறு மகாவித்தியலத்தில் உணவு ஒவ்வாமையினால் 31 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு கரடியனாறு மகாவித்தியாலத்தில் சிற்றுண்டிச்சாலையில் நூடில்ஸ் வாங்கி சாப்பிட்ட மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தியெடுத்து 31 மாணவர்கள் கரடியனாறு வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (11) பகல் அதுமதிக்கப்பட்ட நிலையில் 27 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிற்றுண்டிசாலையை நடாத்திவந்த அதன் உரிமையாளரான பெண் சரணடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் சம்பவதினமான இன்று காலை இடைவேளை நேரத்தில் சிற்றுண்டிச்சாலையில் இடியப்பம், புட்டு, இட்லி, நூடில்ஸ் ஆகிய உணவுகளை மாணவர்கள் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பகல் ஒரு மணியளவில் சிற்றுண்டிசாலையில் உணவு வாங்கி சாப்பிட்ட பல மாணவர்கள் வாந்தியெடுக்க தொடங்கியதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து வாந்தியெடுத்த மற்றும் மாணவர்களை கரடியனாறு வைத்தியசாலையில் தரம் 6 தொடக்கம் 10 ஆண்டு வரையிலான ஆண், பெண்கள் உட்பட 31 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சையளிக்கபட்ட நிலையில் பல மாணவர்களுக்கு மயக்க நிலை ஏற்பட்டதுடன், தொடர்ந்து வாந்தியெடுத்ததையடுத்து 27 மாணவர்களை அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மூன்று அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனையின் போது பழுதடைந்த நூடில்ஸ் விற்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சிற்றுண்டிச்சாலை நடாத்திவந்த பெண் உரிமையாளர் பொலிஸாரிடம் சென்று சரணடைந்துள்ளதையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி மன்னாரில் தொழில் சந்தை
அடுத்த செய்தி விந்தன் தமிழரசில் ஆயுட்கால உறுப்பினராக இணைவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கெஹெலியவிற்கு எதிரான வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

பிப்ரவரி 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கையெழுத்து போராட்டம்

ஜூலை 19, 2025
இலங்கை

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் இரத்த தான நிகழ்வு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழில். கஞ்சாவுடன் முச்சக்கர வண்டி சாரதி கைது

ஜனவரி 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?