அமெரிக்காவில் TikTok செயலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், குறுகிய Videoக்களை விரும்பும் பயனர்களைக் கவரும் வகையில், Instagram Reels செயலியை தனிப் பயன்பாடாக வெளியிட Meta திட்டமிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட TikTok செயலிக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் தடை விதித்துள்ளன.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, Meta நிறுவனம் Instagram இன் இந்த பிரபலமான ‘Reels’ Video அம்சத்தை தனிச் செயலியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
Meta நிறுவனம் ஏற்கனவே 2018-இல் ‘Losso’ என்ற குறுகிய Video செயலியை வெளியிட்டது. ஆனால், அது TikTok இற்குப் போட்டியாக அமையவில்லை.
தற்போது, Meta நிறுவனம் WhatsApp, Instagram , Facebook போன்ற பல்வேறு செயலிகளில் Reels அம்சத்தை வழங்கி வருகிறது. Instagram Reels செயலி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஆனால், அடுத்த சில மாதங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.