Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஐ.நா பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையில் கலந்துரையாடல்.

பிப்ரவரி 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரி பிரான்சே, ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய திட்டத்தின் உதவி பிரதிநிதி நளின் முனசிங்க, உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கடற்றொழில்சார் நிபுணர் பாலித கித்சிறி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையின் கடற்றொழில்துறைக்கும், கடல் வளங்களை பாதுகாப்பதற்கும் ஐ.நா மற்றும் அதன் துணை அமைப்புகளால் வழங்கப்பட்டு வரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், இதனை மேலும் வலுப்படுத்துவதற்கு தேவைப்படும் தொழில்நுட்பம் உள்ளிட்ட உதவிகள் தொடர்பிலும் கோரிக்கை முன்வைத்தார்.

இலங்கையில் கடற்றொழிலாளர்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும், அவற்றை தீர்ப்பதற்கு தமது அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் பற்றி எடுத்துரைத்த அமைச்சர், ஐ.நாவின் ஒத்துழைப்புகள் வழங்கக்கூடியதாக இருந்தால் அதனை செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.

அதேபோல அண்மையில் தாம் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் அமைச்சரிடம் குறிப்பிட்ட ஐ.நா. பிரதிநிதிகள், இதன்போது கடற்றொழிலாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்க்கு மக்கள் வழங்கியுள்ள ஆணை மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி புலம்பெயர் நாட்டில் குடும்பத்துடன் தஞ்சமடைந்த வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர்.
அடுத்த செய்தி அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மீட்கப்பட்ட எலும்புகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் சீரற்ற காலநிலை – 218 பேர் பாதிப்பு

நவம்பர் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களிற்கு பாதணிகள் வழங்கி வைப்பு

ஏப்ரல் 3, 2026
இலங்கை

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த மாணவர்கள்.

பிப்ரவரி 21, 2025
இலங்கை

போலி ஆவணம் மூலம் அரச காணியை விற்பனை செய்து மோசடி – அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?