கணேமுல்ல சஞ்சீவ கொலையில் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் வழங்கிய மத்துகமவைச் சேர்ந்த பெண்ணை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, அந்த பெண் நீதிமன்றத்தின் சட்ட வைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மதுகம – வெலிபென்னவைச் சேர்ந்த வீட்டின் உரிமையாளரான 52 வயதுடைய குறித்த பெண் இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
