வடமாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், 2024 ஆம் ஆண்டிற்கான நான்காம் காலாண்டு ஊராட்சி முற்றக்கூட்டம், கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன்
இன்று (18) பிற்பகல் 02 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் மற்றும் வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. வாகீஷன் ஆகியோரது இணைத் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கந்துரையாடலில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. எஸ்.குணபாலன் வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாவட்ட அளவில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளாக அடையாளம் காணப்பட்ட சிறுவர், பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், விவசாயம், பெண்களின் சிறு கைத்தொழில் உற்பத்தி, போக்குவரத்து உள்ளிட்ட பல காத்திரமான விடயத்தலைப்புகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதுடன் மாவட்ட ரீதியில் குடிசார் அமைப்புகளின் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பரிந்துரைவாத செயற்றிட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
இந்த கூட்டத்தில் உதவி பிரதேச செயலர்கள், பல்துறை சார் அரச அதிகாரிகள், மாவட்ட மற்றும் பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட குடிசார் அமைப்புகளின் சம்மேளன உறுப்பினர்கள், மற்றும் கிறிசலிஸ் நிறுவன சிரேஷ்ட மற்றும் திட்ட இணைப்பாளர்கள் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.