Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் இன்று!

பிப்ரவரி 17, 2025
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

புதிய அரசாங்கத்தின் கன்னி வரவு செலவு திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

அந்த யோசனைகள் பின்வருமாறு :

* இந்த வருடம் 5 வீத பொருளாதார வளர்ச்சியை அடைவதே எதிர்பார்ப்பு
*மூலதனச் செலவுக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து 4%*தேசிய மேலாண்மை கட்டமைப்புக்காக 750 மில்லியன் ரூபா
*இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலாக டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை
* இலங்கை பொருளாதார அதிகார சபை உருவாக்கப்படும்
* கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை ஜப்பானின் நிதியுதவியுடன் விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை
* புதிய மற்றும் கண்டுபிடிப்பு நிதியத்தை ஸ்தாபிக்க 1,000 மில்லியன் ரூபா
* அரசாங்கத்திற்கு சொந்தமான சகல சொகுசு வாகனங்களையும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஏலத்தில் விட நடவடிக்கை
* MPக்களுக்கு வாகனமோ அல்லது வாகன அனுமதிப்பத்திரமோ கிடையாது
* அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் பலன்களை மதிப்பீடு செய்ய குழு
* கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு சத்துணவு திட்டத்திற்காக 7,500 மில்லியன் ரூபா
*சுகாதாரத் துறைக்காக 604 பில்லியன் ரூபா
*தெரிவுசெய்யப்பட்ட முன்பள்ளிகளின் அபிவிருத்திக்காக 80 மில்லியன் ரூபா
*பாடசாலைகளை அடிப்படை வசதிகளை மேம்படுத்த 1,000 மில்லியன் ரூபா
*முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு எதிர்வரும் ஜூலை முதல் 1,000 ரூபாவால் அதிகரிப்பு
*மஹபொல மாணவர் உதவித்தொகை 7,500 ரூபாவாக அதிகரிப்பு
* தரம் 5 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1500 ரூபா நிதியுதவி
* யாழ்.நூலகத்திற்கு கணினிகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க 100 மில்லியன் ரூபா, ஏனைய நூலகங்களின் அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபா
* திருகோணமலையில் 61 எண்ணெய் தாங்கிகளின் கூட்டு அபிவிருத்திக்கு நடவடிக்கை
*பெரும்போகத்தில் நெல் கொள்வனவிற்காக 5,000 மில்லியன் ரூபா
*நெல் விநியோக சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை
* நீர்ப்பாசனத்துறை அபிவிருத்திக்காக 78,000 மில்லியன் ரூபா
* வடக்கு தெங்கு முக்கோணம் உள்ளிட்ட புதிய தென்னந்தோப்பு அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா
* சமூக பாதுகாப்பு செலவு (இழப்பீடு) 232.5 பில்லியன் ரூபா
* சிறுநீரக நோயாளிகளுக்கான உதவித்தொகை 10,000 ரூபாவாக அதிகரிப்பு
* முதியோர் உதவித்தொகையை ஏப்ரல் மாதத்திலிருந்து 5,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை
*சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் புனர்வாழ்வு மையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறுவர்கள், ஆதரவற்ற சிறார்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு
* இயற்கை அனர்த்தம் மற்றும் வனவிலங்கு பாதிப்பால் இடம்பெறும் உயிரிழப்புகள், அங்கவீனமடைவோருக்கான இழப்பீட்டு தொகை 10 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பு
*சிரேஷ்ட பிரஜைகளுக்கு சிறப்பு வட்டி யோசனைத் திட்டம்
* பண்டிகைக் காலத்தில் லங்கா சதொச ஊடாக உணவுப்பொதி
* கொழும்பு நகரை சூழ வசதியான 100 பஸ்கள். 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
* புதிய பஸ் நிறுவனத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை
* ரயில் பெட்டிகளை மறுசீரமைக்க 500 மில்லியன் ரூபா
*தனியார் மற்றும் இ.போ.ச பஸ்கள் ஒன்றிணைந்த நேர அட்டவணையில் பயணிக்க யோசனை
* போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்ப 500 மில்லியன் ரூபா
* ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு நாளாந்த நடவடிக்கைகளுக்காக திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படமாட்டாது
* கிராமங்களில் வீதி அபிவிருத்திக்காக 3000 மில்லியன் ரூபா
*வட மாகாணத்தில் கிராம வீதிகள் மற்றும் பாலங்களின் அபிவிருத்திக்காக 5,000 மில்லியன் ரூபா
* பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 4,267 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
* மலையக தமிழ் இளைஞர்களின் தொழில்பயிற்சி வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்காக 2,450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
*மலையக தமிழ் சமூகத்தின் பாடசாலைக்கு ஸ்மார்ட் *வகுப்பறைகளுக்காக 866 மில்லியன் ரூபா
*கழிவகற்றல் முகாமைத்துவத்திற்காக 750 மில்லியன் ரூபா
* யானை – மனித மோதலை கட்டுப்படுத்த வரவு – செலவு திட்டம் 640 மில்லியனாக உயர்வு
*”இலங்கையர் நாள்” தேசிய வைபவத்தை நடத்த யோசனை. அதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
* அரச ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 15,750 ரூபாவாக உயர்த்தப்படும்,
அரச சேவையின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 24,250 ரூபாவிலிருந்து 40,000 ரூபாவாக 15,750 ரூபாவால் அதிகரிப்பு
* தனியார் துறையில் குறைந்தபட்ச மாத சம்பளம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து 27,000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்
* பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தலையீடு செய்யும்
* அரச ஊழியர்களுக்கு 8,250 ரூபா அதிகரிப்பை குறைந்தபட்ச மாத சம்பள அடிப்படையில் மேற்கொள்ள யோசனை

முந்தைய செய்தி போராட்டம் ஆரம்பித்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்தும் தீர்வு இல்லை.
அடுத்த செய்தி ரொறன்ரோ அடுக்கு மாடி கட்டிடத்தில் தீப்பரவல்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு வந்தாறுமூலையில் குரங்கு கடித்ததில் 6 பெண்கள் படுகாயம்!

ஜூலை 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி வீதி திறப்பு…

ஏப்ரல் 27, 2025
இலங்கை

நாளை முதல் பேருந்துகளில் பயணச் சீட்டு கட்டாயம் போக்குவரத்து அதிகார சபை தெரிவிப்பு!

செப்டம்பர் 30, 2025
இலங்கை

இலங்கையில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள்!

செப்டம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?