Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இந்திய மீனவர்களே இலங்கை எல்லை தாண்டி மீன் பிடிக்க வராதீர்கள் – நூர் மொஹமட் ஆலம்

ஜனவரி 31, 2025
படிக்க 4 நிமிடங்கள்
SHARE

இலங்கை கடற்பரப்பில் .அத்துமீறி நுழைகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையாக உறுதுணையாக இருப்போம் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச தலைவர் நூர் மொஹமட் ஆலம் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (31) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்கள் கடந்த வாரம் இலங்கை கடற்பரப்பில் நுழைந்த போது ஏற்பட்ட அசம்பாவிதத்தை இந்திய தரப்பு பூதாகாரமான விடயமாக மாற்றியுள்ளனர். அதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாத நிலையில் அவர்களின் வார்த்தைப் பிரயோகங்கள் அமைந்துள்ளது.

நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். இந்திய மீனவர்களை அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைய வேண்டாம். அவர்கள் நுழைகின்ற சமயத்தில் இலங்கை கடற்படை அவர்களை கட்டுப்படுத்த அசமந்தப் போக்குடன் நடந்து கொண்டு இருக்கிறது. இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்தையும் நாங்கள் விமர்சித்து குறை கூறி வருகிறோம்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுல் நுழைகின்ற நாட்களில் இலங்கை மீனவர்கள் குறிப்பாக வட பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை அந்த மீனவர்களுக்கு ஏற்படுகின்ற சொத்து இழப்புக்களை கணக்கிட்டு பார்த்தால் சுமார் 700 மில்லியன் ரூபாய் சொத்துக்களை வடபகுதி கடலில் இழந்திருக்கிறோம். இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கையினால் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் இவ்வளவு நாசமாகியுள்ளது.

இந்த விடயங்கள் அனைத்தும் இந்திய தரப்பிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் ஆதார பூர்வமாக கூறுகின்றோம். எனவே இந்திய மீனவர்கள் உள்நுழைவதை தடுப்பதற்கு நாங்கள் அரசுக்கு விடுக்கின்ற கோரிக்கைகள் அல்லது அழுத்தங்கள் காரணமாக கடற்படையினர் இலங்கை கடல் எல்லையில் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.

எனினும் இலங்கை எல்லையில் இன்றி எமது கரையோர பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இந்திய மீனவர்கள் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய தரப்பினரால் கூறப்படுகின்ற விடயங்களை சகித்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது.

வெறுமனே இலங்கை கடற்படை, வட பகுதி மீனவர்கள், இலங்கை அரசின் மீதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். குறித்த துன்பியல் சம்பவமானது இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகில் கடற்படை வீரர் ஒருவர் பாய்ந்து படகை நிறுத்தக் கோரிய போது குறித்த கடற்படை வீரரை கடத்த முயன்ற போது குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. மீனவர்களின் படகில் 5 முதல் 8 மீனவர்கள் மாத்திரம் கடலில் பயணிப்பதை நாம் பார்க்கின்றோம். ஆனால் குறித்த படகில் 13 பேர் வரை பயணித்துள்ளனர்.

ஒரு படகில் 13 பேர் பயணிக்க இந்திய தரப்பு எவ்வாறு அனுமதி வழங்கியது? பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிச் சிட்டை வழங்குகின்றனர். இந்த நிலையில் இவர்கள் அனைவரும் ஒரு படகில் எவ்வாறு பயணித்தார்கள்?

இந்திய கடல் இல்லையை தாண்டக்கூடாது என்கின்ற நிபந்தனையும் குறித்த சிட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையிலே குறித்த நிபந்தனைகளையும் மீறி அவர்கள் வருகின்றனர். எனினும் அவ்வாறு வருகின்றவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டு, மீண்டும் விடுவிக்கப்படுகின்றனர். இந்த நிலையிலே அவர்கள் தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான மீனவர்கள் மீது இந்திய தரப்பு இது வரை என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது?

இந்தியா ஒரு வல்லரசு நாடு என்று கூறிக்கொண்டு, சந்திர மண்டலத்திற்கும், செவ்வாய்க்கிரகத்திற்கும் ஆய்வுக்காக அனுப்புகின்றனர். எனினும் தங்கள் நாட்டு மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டுகின்ற போது உயிரிழப்புக்களையும் சந்திக்கின்றார்கள். கடற்படையினரால் கைதும் செய்யப்படுகின்றனர். எனினும் இலங்கை அரசாங்கத்திடம் எவ்வித தொழில்நுட்பமும் இல்லை. எனவே இந்தியாவினால் இயலாதா? தமது நாட்டின் எல்லையை பாதுகாக்க? தமது நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படுகின்றார்கள் என கூறும் இந்திய அரசு தமது மீனவர்களை பாதுகாக்க அவர்களே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமது நாட்டு எல்லையையும் பாதுகாக்க வேண்டும்.

ஏன் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டிற்கு இந்திய அரசு வருகின்றது இல்லை. இலங்கையில் தனது ஆதிக்கத்தை காண்பிக்கவே இந்தியா இவ்வாறு செயல்படுகின்றது. இதனை வட பகுதி மீனவர்களும் இலங்கை மக்களும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையாக உறுதுணையாக இருப்போம். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவதை தடுப்பதற்கு கடற்படைக்கும் இலங்கை அரசுக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம். இந்திய தரப்பிற்கு ஒரு செய்தியை கூற விரும்புகின்றோம்.

இலங்கை எல்லையை தாண்டி மீன் பிடிக்க வராதீர்கள். இவ்வாறு எல்லையை தாண்டினால் இவ்வாறான துன்பியல் சம்பவம் நடப்பதை தவிர்க்க முடியாது.என தெரிவித்தார்.

முந்தைய செய்தி யாழில். சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த இராணுவ பங்களிப்புடன் வீதி தடைகள்.
அடுத்த செய்தி காலியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் – மூவர் பலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மருதானை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய பெண் கைது

செப்டம்பர் 6, 2025
இலங்கை

கச்சத்தீவு பெருவிழா – கடற்படையினருக்கு 32 மில்லியன் நிதி.

பிப்ரவரி 26, 2025
இலங்கை

முன்னாள் ஜனாதிபதியை CIDயில் ஆஜராகுமாறு அறிவிப்பு!

ஆகஸ்ட் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஆசனம் வழங்கப்படாமையினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்

ஜூன் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?