யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதியில் வாழ்ந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளவும் குடியேற முற்பட்ட போது காணிகள் வேறுநபர்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக முஸ்லீம் அமைப்புக்கள் குற்றம் சுமத்துகிறது.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு குறித்த விடயத்தை முன்வைத்துள்ளனர்.
1975ம் ஆண்டு முதல் பரவிப்பாஞ்சான் பகுதியில் முஸ்லீம்கள் வாழ்ந்து வந்துள்ளோம் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீளவும் குடியமரும் நிலை ஏற்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற போதும் குறித்த காணி அபகரிக்கப்பட்டுள்ளது.
முஸ்லீம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு மீளவும் குடியமரமுடியாமல் உள்ளது. இது தொடர்பாக பல இடங்களிலும் முறையிட்டுள்ளோம் ஆனால் எந்தப் பயனுமில்லை. பல போராட்டங்கள் செய்துள்ளோம் ஆனாலும் எமது போராட்டங்களும், எமது உண்மை நிலைகளும் இருட்டடிப்புச் செய்தே வரப்படுகிறது.