Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் ஆர்ப்பாட்டம்

ஜூலை 29, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கனடா செல்ல தயாரான நிலையில் கடந்த 29.07.2024 அன்று காணாமல் போன நிலையில் மல்லாவி வவுனிக்குளம் பகுதியிலிருந்து மறுநாள் சடலாமாக மீட்கப்பட்ட மல்லாவி யோகபுரம் பகுதியினை சேர்ந்த ஆனந்தராசன் சஜீவன் என்ற இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் பொதுமக்கள் ,பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று காலை மேற்கொண்டிருந்தனர்

ஒரு வருடமாகியும் குறித்த இளைஞனின் படுகொலைக்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், பொலிசாரின் விசாரணைகள் மந்தகதியில் நடப்பதாக கூறியும், துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறியே பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் இன்று குறித்த போராட்டம் முன்னேடுக்கப்பட்டிருந்தது

மல்லாவி மத்திய பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகிய பேரணி நடை பவனியாக மல்லாவி போலிஸ் நிலையம் வரை சென்றிருந்தது

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒன்று கூடி ,

“சசீவன் மரணத்திற்கு நீதி வேண்டும்”

“கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்து”

“விசாரணைகளை துரிதப்படுத்தி நீதியை பெற்று தா”

“எமது நண்பனின் மரணத்திற்கு நீதி வேண்டும்”

“வஞ்சகரின் சூழ்ச்சிக்கு முடிவில்லையா”

“எமது பிள்ளைக்கு நீதி வேண்டும் “

போன்ற எதிர்ப்பு கோசங்களை போராட்டத்தில் கலந்துக் கொண்டிருந்தவர்கள் கோஷமிட்டனர்

குறித்த போராட்த்திற்கு ஆதரவாக இன்றைய தினம் மல்லாவி பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பு ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை , சம்பவ இடத்திற்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்கள் ,மல்லாவி போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுப்பில் சென்றுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் , இளைஞனின் படுகொலைக்கான நீதியினை தான் பெற்று தருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்டிருந்தவர்களிடம் தெரிவித்திருந்தார்,

இதேவேளை குறித்த வழக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்

இந்நிலையில் குறித்த காலப்பகுதிக்குள் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தா விடின் பாரியளவிலான போராட்டம் ஒன்றினை தாம் மேற்கொள்வோம் என்றும் , சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினையும் தாம் முன்னெடுப்போம் என்றும் எச்சரித்து போலிஸ் பொறுப்பதிகாரியிடமும் வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் துரைராஜா ரவிகரன் அவர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது,

எதிர்வரும் பாராளுமன்ற நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் இது தொடர்பில் தான் கேட்டு நடவடிக்கைக்கு கடிந்துரைப்பதாகவும் ரவிகரன் தெரிவித்தார்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி வடமாகாண ஆளுநரை சந்தித்த சுவிஸ் தூதுவர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் மாதா சிலை உடைப்பு – 8 பேர் கைது

ஜூலை 26, 2025
இலங்கை

வவுனியாவில் போதை மாத்திரையுடன் ஒருவர் கைது.

பிப்ரவரி 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரை போராட்டத்தில் கைதான ஐவருக்கு பிணை(Video)

டிசம்பர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டம்!(Photos)

ஆகஸ்ட் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?