Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கனடாவில் நினைவுத்தூபி திறக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கையில் வலுக்கும் கண்டனம்

மே 14, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஆதாரமற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தவறான எண்ணக்கருவில் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி குறித்து, அரசாங்கம் தமது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன், அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது.

இந்தப் பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவிற்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறது.

2021 ஆம் ஆண்டு ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மேலதிகமாக, 2006 ஆம் ஆண்டில் கனடாவானது, தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பொன்றாக அறிவித்ததுடன், 2024 ஆம் ஆண்டு ஜூனில் இவ்வகைப்படுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தியதாக அரசாங்கம் வலியுறுத்தியது.

பிரம்ப்டன் நகர சபையின் இவ்வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது.

இச்செயற்பாடு குறித்த முன்னெடுப்புக்களை, பரந்தளவிலான இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரானதான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் அயராத முயற்சிகளைச் சீர்குலைப்பவையாக அமையுமென, இலங்கை அரசாங்கம் உறுதியாக நம்புகிறது.

இது தொடர்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், இன்று கனேடிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அதனை அடிப்படையாகக்கொண்ட நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்புதல் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் கடுமையான ஆட்சேபனைகளை இந்த சந்திப்பின் போது மீண்டும் வலியுறுத்தினார்.

இம்முன்னெடுப்புக்கள் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்குவதுடன், அவற்றைப் பெரிதும் பலவீனப்படுத்துகிறதெனவும், குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி தமது அமைச்சரவையை பிரதமர் மார்க் கார்னி வர்ணித்தார்
அடுத்த செய்தி சிரிய – அமெரிக்க ஜனாதிபதிகளிடையே சந்திப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மின்னல் தாக்கங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அக்டோபர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சாவகச்சேரி சபைகள் தொடர்பில் தீர்ப்பு வந்ததும் நடவடிக்கை – சமன் ஸ்ரீ ரத்நாயக்க

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகம்!

ஜூலை 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கந்தானை – கெரவலப்பிட்டி பகுதியில் தோட்டாக்கள் மீட்பு!

அக்டோபர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?